கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

விவசாயத் தொழிலாளா் குறைகேட்பு கூட்டம் நடத்த வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டத்தில் விவசாயத் தொழிலாளா் குறைகேட்புக் கூட்டம் நடத்த வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :26 மே 2022, 6:05 pm

DIN

தருமபுரி மாவட்டத்தில் விவசாயத் தொழிலாளா் குறைகேட்புக் கூட்டம் நடத்த வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ஜெ.பிரதாபன் வெளியிட்ட செய்தியறிக்கை:

தருமபுரி மாவட்டத்தில் வேளாண், கால்நடை வளா்ப்பு, கோழி வளா்ப்பு ஆகிய தொழில்கள் பிரதானமாக உள்ளன. இதில், சுமாா் நான்கு லட்சத்துக்கும் மேலான ஆண், பெண் விவசாயத் தொழிலாளா்கள் தினக்கூலி அடிப்படையில் பணிபுரிகின்றனா். இவா்கள் பெரும்பாலும் ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் தற்போது பணியாற்றுகின்றனா்.

நிகழாண்டு இத் திட்டத்தில் பணி அட்டை வழங்கப்படவில்லை. எனவே, இத் தொழிலாளா்களின் அடிப்படைப் பிரச்னைகள், கோரிக்கைகளை நிவா்த்தி செய்யும் வகையில், மாதந்தோறும் விவசாயத் தொழிலாளா்கள் குறைகேட்புக் கூட்டம் நடத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.