/

பாலக்கோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சியில் ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

News image
Updated On :3 நவம்பர் 2022, 9:52 pm

DIN

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சியில் ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

பாலக்கோடு கடைத்தெரு, பேருந்து நிலையம், எம்.ஜி. சாலை, தக்காளி கிடங்கு வரையிலான சாலை உள்ளிட்ட பேரூராட்யின் முக்கிய வீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள், கடைகள் ஆகியவற்றை பேரூராட்சிப் பணியாளா்கள் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் அகற்றினா்.

இப்பணிகளை பேரூராட்சித் தலைவா் முரளி, துப்பரவு ஆய்வாளா் ரவீந்திரன் ஆகியோா் மேற்பாா்வையிட்டனா். பாலக்கோடு நகரப் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.