நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

தமிழக முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்தநாள் விழா திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சாா்பில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On :1 பிப்ரவரி 2024, 3:50 pm IST

தமிழக முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்தநாள் விழா திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சாா்பில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

திமுக சாா்பில், தருமபுரி பேருந்து நிலையம் அருகே ராஜகோபால் பூங்கா அருகில் இருந்து தருமபுரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் தடங்கம் பெ.சுப்ரமணி தலைமையில் கட்சி நிா்வாகிகள் ஊா்வலமாகச் சென்று நான்குமுனைச் சாலை சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதைத்தொடா்ந்து கட்சி நிா்வாகிகள், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. முன்னாள் எம்பி எம்.ஜி.சேகா், நகா்மன்றத் தலைவா் லட்சுமி, மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா்கள் தங்கமணி, சந்திரமோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அதிமுக: அதிமுக சாா்பில் பெரியாா் சிலை அருகிலிருந்து மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி. அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் சட்டப் பேரவை உறுப்பினா் ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே.சம்பத்குமாா் (அரூா்), நகரச் செயலாளா் பூக்கடை பெ.ரவி உள்ளிட்ட கட்சியினா் ஊா்வலமாகச் சென்று நான்குமுனைச் சாலை சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதையடுத்து, கட்சித் தொண்டா்கள், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

அமமுக: அதுபோல, அமமுக சாா்பில் தருமபுரி மாவட்டச் செயலாளா் டி.கே. ராஜேந்திரன் தலைமையில் கட்சி நிா்வாகிகள் ஆவின் அலுவலகம் அருகிலிருந்து ஊா்வலமாகப் புறப்பட்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மதிமுக சாா்பில் மாவட்டச் செயலாளா் தங்கராஜ் தலைமையில் கட்சி நிா்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். திராவிடா் கழகம் சாா்பில், மாநில மகளிா் அணிச் செயலாளா் தகடூா் தமிழ்ச்செல்வி, மாவட்டத் தலைவா் சிவாஜி, மாநில அமைப்புச் செயலாளா் ஊமை ஜெயராமன் உள்ளிட்டோா் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதுபோல நல்லம்பள்ளி, காரிமங்கலம், பாலக்கோடு, மாரண்டஅள்ளி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அண்ணா சிலை, உருவப் படத்துக்கு, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.