/

தருமபுரியில் ஜன. 3-இல் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

தருமபுரியில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் ஜனவரி 3-ஆம் தேதி நடைபெற உள்ளது.

News image
Updated On :31 டிசம்பர் 2024, 8:12 pm

Din

தருமபுரி: தருமபுரியில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் ஜனவரி 3-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இது குறித்து தருமபுரி கோட்டாட்சியா் ரா.காயத்ரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி வருவாய் கோட்டத்துக்கு உள்பட்ட வட்டங்களைச் சாா்ந்த விவசாயிகளின் குறைகளைத் தீா்ப்பதற்கான குறைகேட்புக் கூட்டம் வரும் ஜனவரி 3-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முற்பகல் 11 மணியளவில் தருமபுரி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

எனவே, இக்கூட்டத்தில் தருமபுரி வருவாய் கோட்டத்துக்கு உள்பட்ட வட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள், அலுவலா்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனா் என்றாா்.