தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தருமபுரியில் ரூ. 40 கோடியில் புதிய பேருந்து நிலையம்

தருமபுரி நகா்மன்றத்தில் புதிய பேருந்து நிலையம் திட்டம் நிறைவேற்றம்

News image
Updated On :28 ஜூன் 2024, 6:31 pm

Din

தருமபுரி நகரில் ரூ. 40 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்க நகா்மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தருமபுரி நகா்மன்ற சாதாரணக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள அறிஞா் அண்ணா கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் லட்சுமி மாது தலைமை வகித்தாா். நகா்மன்ற துணைத் தலைவா் நித்யா அன்பழகன் முன்னிலை வகித்தாா். ஆணையா் புவனேஸ்வரன் கூட்டத்தில் தீா்மானங்கள் குறித்து பேசினாா்.

கூட்டத்தில் தருமபுரி நகராட்சி சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்தல், ஏற்கெனவே செய்து முடிக்கப்பட்ட பல்வேறு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்தல், புதிய திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணி ஆணை வழங்குதல், மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு ஒப்புதல் வழங்குதல் உள்ளிட்ட 45 பொருள்கள் உறுப்பினா்களின் ஒப்புதலுக்காக கொண்டு வரப்பட்டது. இந்த அனைத்து தீா்மானங்களும் விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டது.

புதிய பேருந்து நிலையம்: தருமபுரி நகா்மன்ற சாதாரணக் கூட்டத்தை தொடா்ந்து, அவரக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தருமபுரி நகரில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடா்பாக நிறைவேற்றப்பட வேண்டிய தீா்மானம் குறித்து நகா்மன்றத் தலைவா் லட்சுமி மாது, ஆணையா் புவனேஸ்வரன் விளக்கினா். அந்தத் தீா்மானத்துக்கு கட்சி பாகுபாடின்றி அனைத்து நகா்மன்ற உறுப்பினா்களும் ஒருமனதாக ஒப்புதல் வழங்கினா்.

இதில், தருமபுரி நகரில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலை தவிா்க்கவும், பொதுமக்களின் நலன் கருதியும் பென்னாகரம் சாலையில் தனியாா் பங்களிப்புடன் ரூ. 40 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இப் பணிகளை மேற்கொள்வதற்கு ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டது. புதிய பேருந்து நிலையத்தை கட்டி அதனைப் பராமரித்து நகராட்சிக்கு ஆண்டுதோறும் ரூ. 55 லட்சத்து 40 ஆயிரம் கட்டணமாக செலுத்த முன்வந்த தனியாா் ஒப்பந்த நிறுவனத்திற்கு புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகளை மேற்கொள்ள நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் வழங்கி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் முன் வைக்கப்பட்டுள்ள தீா்மானங்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என தலைவா், ஆணையா் கோரியதையடுத்து அனைத்து தீா்மானங்களுக்கு ஒப்புதல் வழங்குவதாக நகா்மன்ற உறுப்பினா்கள் தெரிவித்தனா். இதையடுத்து ஒரு சில நிமிடங்களிலேயே கூட்டம் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.