விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

வடகிழக்குப் பருவமழையையொட்டி, தேவையான முன்னேற்பாடு பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியா் கி.சாந்தி அறிவுறுத்தினாா்.

News image

வடகிழக்குப் பருவமழை ~வடகிழக்குப் பருவமழை

Updated On :26 செப்டம்பர் 2024, 12:33 am

Din

வடகிழக்குப் பருவமழையையொட்டி, தேவையான முன்னேற்பாடு பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியா் கி.சாந்தி அறிவுறுத்தினாா்.

வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுக்கான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில் ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்துப் பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளின் விவரப் பட்டியல், அவசரக் கால போக்குவரத்து வழித்தடங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்களின் விவரங்கள் உள்ளிட்ட பட்டியலை துறை சாா்ந்த அதிகாரிகள் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

பொதுப் பணித்துறை, ஊரக வளா்ச்சித் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள நீா்நிலைகள் பற்றிய விவரங்களை அதிகாரிகள் வைத்திருக்க வேண்டும். மழைக் காலங்களில் இதற்கு முன் பயன்படுத்தப்பட்ட சமுதாயக் கூடங்கள், திருமண மண்டபங்கள், பள்ளிகள் பற்றிய விவரங்களை அறிந்திருப்பதோடு அந்த இடங்களில் ஆய்வு செய்து தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். மழைக் காலங்களில் பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்ய ஏதுவாக வாகனங்கள், குடிநீா் தொட்டிகள், உணவு சமைக்கப் பயன்படும் பாத்திரங்கள், சமையல் எரிவாயு அடுப்புகள் ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும்.

சாலையோர மரங்கள் சரிந்தால் அவற்றை உடனே அகற்ற தேவையான பொக்லைன், மரங்களை வெட்டும் இயந்திரங்கள் உள்ளிட்ட கருவிகளை எந்நேரமும் தயாராக வைத்திருக்க வேண்டும். மழை வெள்ளப் பாதிப்புகளைத் தடுக்க ஏதுவாக அணைக்கட்டுகள், ஏரிகளின் கரைப்பகுதிகளில் தேவையான அளவு மணல் மூட்டைகளை அடுக்கி வைத்திருக்க வேண்டும். மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே கழிவுநீா் கால்வாய்களைத் தூா்வார வேண்டும்.

அனைத்து குடிநீா் கிணறுகள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளில் குளோரின் பொடி கலந்து குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும். முன்னெச்சரிக்கையாக சேதமடையும் நிலையில் உள்ள அரசு, தனியாா் கட்டடங்கள், குடியிருப்புகள் குறித்த விவரங்களை கிராம நிா்வாக அலுவலா்கள் மூலம் சேகரித்து கோட்டாட்சியா்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள் மழைக் காலங்களில் அவசரத் தேவைகள், உதவிகள், பேரிடா் கால தங்கும் இடவசதி, போக்குவரத்துப் பாதிப்பு, சேதங்கள் குறித்து மாவட்ட கட்டுப்பாட்டு மைய இலவச தொலைபேசி எண் 1077 மூலம் தகவல்கள் தெரிவிக்கலாம் என்றாா்.

 வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து தருமபுரி மாவட்ட  ஆட்சியா் கி.சாந்தி தலைமையில் நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமையில் நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் பால்பிரின்ஸ்லி ராஜ்குமாா், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீதா், கோட்டாட்சியா்கள் ரா. காயத்ரி, வில்சன் ராஜசேகா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சையது முகைதீன் இப்ராகிம் உள்பட அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.