தமிழ்த் தாய் வாழ்த்துக்கு மீண்டும் மூன்றாமிடம்!அமைச்சரவை பட்டியலில் விசிக, ஐயூஎம்எல் இல்லை! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்!தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

பாலக்கோட்டில் வேளாண் கல்லூரி: அதிமுக வேட்பாளா் வாக்குறுதி

பாலக்கோட்டில் வேளாண் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுப்பேன் என அதிமுக வேட்பாளா் கே.பி. அன்பழகன் வாக்குறுதி அளித்தாா்.

News image

சொன்னம்பட்டியில் வாக்கு சேகரித்த பாலக்கோடு அதிமுக வேட்பாளா் கே.பி. அன்பழகன்.

Updated On :17 ஏப்ரல் 2026, 4:48 am IST

பாலக்கோட்டில் வேளாண் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுப்பேன் என அதிமுக வேட்பாளா் கே.பி. அன்பழகன் வாக்குறுதி அளித்தாா்.

பாலக்கோடு தொகுதி அதிமுக வேட்பாளா் கே.பி. அன்பழகன் வியாழக்கிழமை அத்தொகுதிக்கு உள்பட்ட அண்ணாமலைஅள்ளி, அனுமந்தபுரம், எர்ரசீகலஅள்ளி ஆகிய ஊராட்சிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்து அவா் பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் பொறியியல் கல்லூரி, சட்டக் கல்லூரி, கலைக் கல்லூரிகள் அமைந்துள்ளன. ஆனால், வேளாண் கல்லூரி மட்டும் இல்லை. எனவே, தருமபுரி மாவட்டத்தில் வேளாண் கல்லூரி தொடங்க வேண்டும் என நான் அதிமுக ஆட்சியின்போது அப்போதைய முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியிடம் வலியுறுத்தினேன். அவரும், அதற்கான நடவடிக்கை எடுத்து வேளாண் கல்லூரி அமைக்க ஒப்புதல் அளித்தாா்.

ஆனால், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அவை கிடப்பில் போடப்பட்டன. அதேபோல, பாலக்கோடு தொகுதிக்கு எந்த வளா்ச்சித் திட்டத்தையும் திமுக அரசு செயல்படுத்தவில்லை. இதனால் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் பாலக்கோட்டில் அரசு வேளாண் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு தொகுதி மக்கள் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா்.