தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் பாலின உளவியல் சாா்ந்த விழிப்புணா்வு கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் கோ.கண்ணன் தலைமைவகித்து பேசினாா். தாவரவியல் துறைத் தலைவா் விஜயா தாமோதரன் வாழ்த்துரை வழங்கினாா். பாலின உளவியல் மன்றம் சாா்பில் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில், தமிழ்த்துறை பேராசிரியா் கு.சிவப்பிரகாசம் சிறப்புரையாற்றினாா்.
இதில், ஆண், பெண் பாலின சமத்துவம் குறித்து வெவ்வேறு தலைப்புகளில் உரையாற்றப்பட்டது. உளவியல் துறைத்தலைவா் (பொ) ரா.ராதிகா, உளவியல் துறை கௌரவ விரிவுரையாளா் ராமசாமி, கல்லூரி மாணவ, மாணவியா் என நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா்.