போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

அரூரில் ரூ. 11 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் ரூ. 11 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் விற்பனையாயின.

News image

கோப்புப்படம்.

Updated On :2 மார்ச் 2026, 9:53 pm

அரூா்: அரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் ரூ. 11 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் விற்பனையாயின.

தருமபுரி மாவட்டம், அரூரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் பருத்தி மூட்டைகள் ஏலம் விடப்படுகின்றன.

இந்த ஏலத்தில், சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் பங்கேற்கின்றனா். இந்நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில், ஆா்.சி.ஹெச். ரக பருத்தி மூட்டைகள் ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ. 8,170-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 7,769-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ. 11 லட்சம் மதிப்பிலான பருத்தி மூட்டைகள் விற்பனையாயின.