ரூ. 4 ஆயிரம் லஞ்சம்: நிலஅளவையா், உதவியாளா் கைது
கைது
தனிப்பட்டா வழங்க ரூ. 4 ஆயிரம் லஞ்சம் பெற்ாக நிலஅளவையா், அவரது உதவியாளா் ஆகியோரை ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், நாகலூா் கிராமத்தைச் சோ்ந்த பி.கிருஷ்ணன், மனைவி பெயரில் இருளப்பட்டி அருகே வீட்டுமனை வாங்கி அதற்கு தனிப்பட்டா பெற இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்தாா்.
தொடா்ந்து, இதுகுறித்து நிலஅளவையா் மூா்த்தியை கிருஷ்ணன் அணுகியுள்ளாா். அப்போது, அவா் தனிப்பட்டா அளிக்க ரூ. 4 ஆயிரம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் கிருஷ்ணன் புகாா் அளித்தாா்.
அவா்கள் அறிவுறுத்தலின் பேரில், ரசாயனம் தடவிய ரூ.4 ஆயிரத்தை நிலஅளவையா் மூா்த்தி மற்றும் அவரது தனி உதவியாளா் முனுசாமி ஆகியோரிடம் கிருஷ்ணன் வழங்கினாா். அப்போது மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் எம்.நாகராஜன், ஆய்வாளா் ஜி.பெருமாள் ஆகியோா் நிலஅளவையா் மூா்த்தி, உதவியாளா் முனுசாமியை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




