மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் விரைவான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஒசூர் நீதிமன்றம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் விரைவான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஒசூர் நீதிமன்றம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் பள்ளி மாணவிகள் உள்பட பல இளம்பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிக அளவில் தற்போது நடைபெறுகின்றன. இதைத் தடுக்கும் வகையில், பெண்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கத் தனியாக விரைவு நீதிமன்றத்தையும், மகளிர் காவல் நிலையத்தையும் ஒவ்வொரு நகரிலும் அமைக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதில், கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சேதுமாதவன், தேன்கனிக்கோட்டை வட்டச் செயலர் சேகர், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஜெயராகவன், இருதயராஜ், மூர்த்தி, ஆஞ்சலாமேரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com