
"போச்சம்பள்ளி சுற்று வட்டாரத்தை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும்'
போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை வறட்சியால் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் என பர்கூர் வட்டார
போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை வறட்சியால் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் என பர்கூர் வட்டார காங்கிரஸ் தலைவர் விவேகானந்தன் கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விளைநிலங்களில் ஆண்டுதோறும் பருவ மழையை நம்பி துவரை, மக்காச்சோளம், மா, பச்சைப் பயிறு, கொள்ளு, கேழ்வரகு நிலக்கடலை சாகுபடி செய்வது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால், போச்சம்பள்ளி, சுற்று வட்டாரப் பகுதி கடும் வறட்சி
நிலவியது.
இதனால் விவசாயிகள் பயிர்வகை மற்றும் அனைத்து வகையான விவசாயமும் செய்ய முடியாமல் தவித்து வந்தனர்.
பசுந்தீவனம் இல்லாததால் தாங்கள் வளர்த்து வந்த பசுமாடு, காளை மாடுகளை விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மழை பெய்ததால் விவசாயிகள் தங்களது விளைநிலங்களை உழுது நிலக்கடலை, சோளம், கம்பு, மக்காச்சோளம், கத்திரி, மிளகாய், பாகற்காய், அவரை போன்ற பயிர் வகைகள் பயிரிட்டுள்ளனர். ஆனாலும் பருவ மழை பெய்யாததால் டிராக்டர்களில் தண்ணீர் விலைக்கு வாங்கி பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுகின்றனர்.
எனவே, போச்சம்பள்ளி தாலுகாவை வறட்சியால் பாதித்த பகுதி என்று அறிவித்து, பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென அதில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






