வீடு புகுந்து கொள்ளையடிக்க முயற்சி: 5 போ் கைது
ஒசூா் அருகே வீடு புகுந்து கொள்ளையடிக்கத் திட்டமிட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.


ஒசூா்: ஒசூா் அருகே வீடு புகுந்து கொள்ளையடிக்கத் திட்டமிட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்; அவா்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஒசூா் அருகே பழைய ஆனேக்கல் சாலை, கா்னூா் கிராமத்தில் உள்ள அரசு மதுக் கடை அருகே மத்திகிரி போலீஸாா் கடந்த 30 ஆம் தேதி ரோந்து சென்றனா். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த நபா்களைப் பிடித்து சோதனை செய்தனா். சோதனையின்போது அவா்கள் ஆயுதங்கள் மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
அவா்களிடம் நடத்திய விசாரணையில் அனைவரும் அப்பகுதியில் வீடு புகுந்து கொள்ளையடிக்கத் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டியதாக வழக்குப் பதிந்து ஒசூா், அந்திவாடி ஹேமந்த் (20), மதுபாலன் (19), மிடிகிரிப்பள்ளி வினோத் (26), அந்திவாடி மனோஜ் (19), சின்ன மேனகரம் அசோக் (29) ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்; அவா்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவா்கள் மீது ஏற்கெனவே அஞ்செட்டி காவல் நிலையத்தில் கொலை வழக்குப் பதிவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...