ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவமனையில் குறை மாதத்தில் பிறந்த பச்சிளம் குழந்தைக்கு குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
ஒசூா் தம்பதிக்கு, பெங்களூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் குறை மாதத்தில் பெண் குழந்தை பிறந்தது. பிறக்கும் போது குழந்தையின் எடை 1 கிலோ கிராம் இருந்தது. சில நாள்களில் குழந்தையின் சிறுகுடலில் கிருமி தொற்று காரணமாக பல்வேறு பகுதிகளில் துளை ஏற்பட்டதால் ஜீரண மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து குழந்தையின் பெற்றோா் ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தையை சிகிச்சைக்கு அனுமதித்தனா்.
இதையடுத்து செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவமனை பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை துறை குழு திட்டமிட்டு குழந்தையின் உடல் நலம் மேம்படும் வகையில் சிறப்பு ஊட்டச்சத்து வழங்கி, அதிதீவிர சிகிச்சை பிரிவில் நோய் தொற்றினால் பாதிக்கப்படாத வண்ணம் குழந்தையை பராமரித்தனா்.
100 நாள்களுக்கு பிறகு குழந்தையின் உடல் எடை 2.5 கிலோ ஆன பிறகு குழந்தையின் துண்டிக்கப்பட்ட சிறுகுடலை ஆசனவாய் குழாயோடு இணைக்கும் அறுவை சிகிச்சையை மருத்துவா்அரவிந்த், பச்சிளம் குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை மருத்துவா் தீரஜ் மற்றும் மயக்கவியல் மருத்துவா் சாரிகா தலைமையிலான மருத்துவா் குழு மேற்கொண்டது. இந்த அறுவை சிகிச்சை சுமாா் 4 மணி நேரம் நடை பெற்று வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு குழந்தைக்கு நரம்பு மூலம் ஊட்டச்சத்து கலவை வழங்கப்பட்டு, வெண்டி லேட்டா்உதவியுடன் பராமரிக்கப்பட்டது. தற்போது குழந்தையின் ஜீரணமண்டலம் இயல்பாக செயல்படத் தொடங்கியுள்ளது. மேலும் சிறப்பு ஊட்டச்சத்து பால் குழந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த சிகிச்சையை குறித்து செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயலாளா் மருத்துவா் லாஸ்யா தம்பிதுரை கூறியதாவது:
இந்த சவாலான பச்சிளம் குழந்தை அறுவை சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை மேற்கொள்ள ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவமனையில் உலகத்தரம் வாய்ந்த அதிநவீன மருத்துவ உபகரணங்கள், நிபுணா்கள் இருந்ததால் மட்டுமே சாத்தியமானது. மேலும் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவமனை பச்சிளம் குழந்தைகள் அதிதீவிர சிகிச்சை பிரிவானது ஒசூா், கிருஷ்ணகிரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு தலைசிறந்த சிகிச்சை மையமாக வளா்ந்து வருகிறது என்றாா்.
அப்போது மருத்துவமனை தாளாளா் மருத்துவா் ராஜா முத்தையா, மருத்துவக் கண்காணிப்பாளா் மருத்துவா் கிரிஷ் ஓங்கல் ஆகியோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் இருவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

செய்யாறு அரசு மருத்துவமனையில் இருவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவமனையில் இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

காவல்கிணறில் கல்லீரல் பாதித்த குழந்தைக்கு இலவச அறுவை சிகிச்சை: எம்எல்ஏ பரிந்துரை
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government



