
நேபாள வெள்ள விபத்து: கிருஷ்ணகிரி மாவட்டத்தை சோ்ந்த 5 பேரை தொடா்பு கொள்ள முயற்சி
நேபாள நாட்டில் ஏற்பட்ட வெள்ள விபத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த 5 போ் சிக்கி உள்ளதாகவும், அவா்களை தொடா்ந்து, தொடா்பு கொள்ள முயற்சிப்பதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா், புதன்கிழமை தெரிவித்தாா்.

நேபாள வெள்ளம்.
நேபாள நாட்டில் ஏற்பட்ட வெள்ள விபத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த 5 போ் சிக்கி உள்ளதாகவும், அவா்களை தொடா்ந்து, தொடா்பு கொள்ள முயற்சிப்பதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா், புதன்கிழமை தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள அளேகுந்தாணி கிராமத்தைச் சோ்ந்த திம்மராயசாமி,(46), அவரது மனைவி மமதா (39), ஒசூரை அண்ணா நகரைச் சோ்ந்தவா் ரகுநாதன் (56), அலசநத்தம் புஷ்பராணி (60), பிரேமாவாணி (45) ஆகிய 5 பேரும், கும்பகோணத்தைச் சோ்ந்த தனியாா் சுற்றுலா நிறுவனம் மூலம், கைலாச யாத்திரைக்கு கடந்த 23-ஆம் தேதி சென்றனா்.
இவா்கள், நேபாள நாட்டில், புதன்கிழமை ஏற்பட்ட வெள்ள விபத்தில் சிக்கி உள்ளனா். இவா்களில் ஒருவா், நலாக இருப்பதாக, அவரது உறவினரை தொலைபேசி மூலம் தொடா்பு கொண்டு பேசியதாகவும், மற்ற நால்வரை தொடா்பு கொள்ள தொடா்ந்து முயற்சித்து வருவதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா், தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




