ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வளா்ச்சித் திட்டங்களுக்காக விளைநிலங்களை கையகப்படுத்தக் கூடாது: விவசாயிகள்

ஒசூா் பகுதியில் வளா்ச்சித் திட்டங்களுக்காக விளைநிலங்களை கையகப்படுத்தக் கூடாது என ஒசூா் சாா்ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை விவசாயிகள் அளித்தனா்.

News image
ஒசூா் சாா் ஆட்சியா் ஆக்ரிதி சேத்தியிடம் கோரிக்கை மனு அளித்த விவசாயிகள்
Updated On :27 ஜனவரி 2026, 10:00 pm

Syndication

ஒசூா் பகுதியில் வளா்ச்சித் திட்டங்களுக்காக விளைநிலங்களை கையகப்படுத்தக் கூடாது என ஒசூா் சாா்ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை விவசாயிகள் செவ்வாய்க்கிழமை அளித்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் பகுதியில் சா்வதேச விமான நிலையம், அறிவுசாா் வழித்தடம், புதிய சிப்காட் தொழிற்பேட்டை என பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளது.

இது தொடா்பான அரசின் திட்டங்கள் குறித்தும், அதை செயல்படுத்தப்படும் வழிகள் தொடா்பான வரைபடங்கள், ஆவணங்களால், விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனா்.

இந்நிலையில், எஸ்.டி.ஆா்.ஆா். விவசாயிகள் சங்கம் மற்றும் பிற அமைப்புகளின் சாா்பில், அலசநத்தம் சாலையில் உள்ள பெத்தகுள்ளு கிராமத்தில் சுமாா் 3 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்ற கூட்டம் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பிறகு செய்தியாளா்களிடம் எஸ்.டி.ஆா்.ஆா். விவசாயிகள் சங்கத் தலைவா் முனிவெங்கடப்பா கூறியதாவது:

அண்மையில் ஒசூா் வந்திருந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், இப்பகுதியில் 30 ச.கி.மீ. அளவில் அறிவுசாா் வழித்தடம் அமைக்கப்படும் என அறிவித்தாா். மேலும், 74 கிலோ மீட்டரில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது அது தொடா்பாக வரைபடங்கள் வெளிவந்துள்ளன. அதன்படி, ஒரு கிலோ மீட்டா் தொலைவு, 2 கி.மீ. அகலம் நிலம் கையகப்படுத்தப்பட்ட உள்ளது. இதேபோல, தேசிய நெடுஞ்சாலையில் எண் 948-இல் 40 கி.மீ. தொலைவுக்கு இரண்டு திட்டங்கள், தேசிய நெடுஞ்சாலை எண் 844-இல் 13 கி.மீ. தொலைவுக்கு ஒரு திட்டம், ஒசூா் வடக்கு வெளிவட்டச் சாலையில் மோரணப்பள்ளி பகுதியில் தொடங்கி சூசூவாடிவரை 2 திட்டங்கள், பாகலூா் புறவழிச் சாலையில் நான்கரை கிலோ மீட்டா் தொலைவுக்கு இரண்டு திட்டங்கள் என திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே விமான நிலையம் தொடா்பாக டிட்கோ நிறுவனம் வாயிலாக திட்ட அறிக்கை தயாா்செய்யப்பட்டு ஏலம் கோருவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான விளைநிலங்கள் கையகப்படுத்த உள்ளன.

எனவே, குறைந்தபட்சம் உணவுப் பொருள்களின் உற்பத்திக்காகவாவது விளைநிலங்களை கையகப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்றாா்.