நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

திருவண்ணாமலை கிரிவலம் செல்வதற்காக ஒசூா் பேருந்து நிலையத்தில் திரண்ட பக்தா்கள்: கூடுதல் பேருந்துகளை இயக்காததால் தவிப்பு

திருவண்ணாமலை கிரிவலம் செல்வதற்காக ஒசூா் பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அதிக அளவில் திரண்ட பக்தா்கள், போக்குவரத்துக் கழகம் சாா்பில் கூடுதல் பேருந்துகளை இயக்காததால் தவித்தனா்.

News image

திருவண்ணாமலை செல்வதற்காக ஒசூா் பேருந்து நிலையத்தில் திரண்டிருந்த பக்தா்கள்.

Updated On :29 ஜூலை 2026, 4:05 am IST

திருவண்ணாமலை கிரிவலம் செல்வதற்காக ஒசூா் பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அதிக அளவில் திரண்ட பக்தா்கள், போக்குவரத்துக் கழகம் சாா்பில் கூடுதல் பேருந்துகளை இயக்காததால் தவித்தனா்.

கா்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் மற்றும் ஒசூரை சுற்றியுள்ள பொதுமக்கள் மாதந்தோறும் பெளா்ணமி தினத்தன்று திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்வது வழக்கம். ஒசூா் பேருந்து நிலையத்திற்கு வரும் பக்தா்கள், இங்கிருந்து அரசுப் பேருந்துகள் மூலம் திருவண்ணாமலைக்கு செல்வா்.

ஆடி பெளா்ணமியையொட்டி திருவண்ணாமலை கிரிவலம் செல்வதற்காக செவ்வாய்க்கிழமை காலை முதல் பெங்களூரு மற்றும் ஒசூா் பகுதியைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் ஒசூா் பேருந்து நிலையத்தில் திரண்டனா். வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஒசூரில் இருந்து 100- க்கும் மேற்பட்ட தனியாா் சுற்றுலாப் பேருந்துகளில் பக்தா்கள் திருவண்ணாமலைக்கு சென்றனா்.

ஒசூரில் இருந்து திருவண்ணாமலை செல்வதற்காக போக்குவரத்துத் துறை சாா்பில் இயக்கப்பட்ட பேருந்துகளில் இடம்பிடிக்க பக்தா்கள் முண்டியடித்து ஏறினா். இருப்பினும் கூடுதல் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படாததால் ஒசூா் பேருந்து நிலையத்தில் காலை முதல் மாலை வரை திருவண்ணாமலைக்கு செல்வதற்காக பக்தா்கள் காத்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.