நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

பரமத்தி வேலூர் ஏலச் சந்தையில் வாழைத்தார்களின் விலை உயர்வு

பரமத்தி வேலூர் ஏலச் சந்தையில் ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு வாழைத்தார்களின் விலை உயர்வடைந்துள்ளதால், வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On :30 ஜனவரி 2024, 9:54 pm IST

பரமத்தி வேலூர் ஏலச் சந்தையில் ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு வாழைத்தார்களின் விலை உயர்வடைந்துள்ளதால், வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பரமத்தி வேலூர் காவிரி கரையோரப் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன.
மேலும், சிறு விவசாயிகள் பரமத்தி வேலூர் வாழைத்தார் சந்தைக்கு விளைந்த தங்களது வாழைத்தார்களை நேரடியாக கொண்டுவந்து விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 500 வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் பூவன் அதிகபட்சமாக ரூ.100 வரை விற்பனையானது. ரஸ்தாளி அதிகபட்சமாக ரூ.200-க்கும், பச்சைலாடன் அதிகபட்சமாக ரூ.250-க்கும், கற்பூரவள்ளி ரூ.250-க்கும் ஏலம் போனது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.7-க்கு விற்பனையானது.
புதன்கிழமை 1,500 வாழைத்தார்கள் ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் பூவன் அதிகபட்சமாக ரூ.300 வரையிலும், ரஸ்தாளி அதிகபட்சமாக ரூ.350-க்கும், பச்சைலாடன் அதிகபட்சமாக ரூ.350-க்கும், கற்பூரவள்ளி ரூ.400-க்கும் ஏலம் போனது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.10-க்கு விற்பனையானது. ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு வாழைத்தார்களின் விலை உயர்வடைந்துள்ளதால் வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.