வெண்ணந்தூர் வட்டார தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வே.ராஜதுரை தலைமை வகித்தார். இதில் வேளாண் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் அட்மா திட்டச் செயல்பாடுகள் குறித்தும், வேளாண் துறையின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் நோக்கம் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கிக் கூறப்பட்டது.
மேலும், நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தின் கீழ் சொட்டுநீர், தெளிப்புநீர், பாசனக் கருவிகள் பெற்றிடவும் விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினர்.
கூட்டத்தில் முன்னிலை வகித்த வெண்ணந்தூர் வட்டார அட்மா திட்ட தலைவர் எஸ்.பி.தாமோதரன், தமிழக அரசின் சாதனைகள், அட்மா திட்டங்களின் பயன்கள் விவசாயிகளுக்கு சென்றடைவது குறித்து பேசினார். மேலும், வேளாண் அலுவலர் மா.செளந்தர்ராஜன், துணை வேளாண் அலுவலர் பழனிவேல் வேளாண் துறையின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் விதைகள், நுண்ணூட்டங்கள், தொழில்நுட்பங்கள் குறித்தும், பயிற்சிகள், பல்வேறு மானியத் திட்டங்கள் குறித்தும் விளக்கமளித்தனர். கால்நடை உதவி மருத்துவர் தே.லில்லி அருள் குமாரி கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் வழங்கப்படும் திட்டங்கள் மானியங்கள் குறித்தும் கூறினார்.
இதில், தோட்டக்கலைத் துறையின் மூலம் வழங்கி வரும் திட்டங்கள், மானிய விவரங்கள், விவசாயிகளுக்கு வழங்கப்படும் சமூக காடுகள் திட்ட மரக் கன்றுகள், பட்டு வளர்ச்சித் துறையின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மல்பெரி செடிக்கான மானியம், பட்டுபுழு குடில் அமைத்திட மானியம், பட்டுப் புழுக்கள் வளர்த்து விவசாயிகளுக்கு வழங்கிடும் மானியம், திட்டத்தின் நோக்கம், வணிகத் துறையின் கீழ் உழவன் செயலி, உழவர் சந்தை, சந்தை நிலவரங்கள், விவசாயிகள் ஆர்வலர்கள் குழு, விவசாயிகள் உற்பத்தியாளர்கள் குழு அமைப்பது, அதன் சிறப்பம்சம் குறித்து விவரிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அப்பல்லோ மருத்துவமனை லாபம் 38.4% உயர்வு!

ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

கிராஸிம் இண்டஸ்ட்ரீஸ் காலாண்டு லாபம் 39% உயர்வு!

இன்னா புள்ள படமா... கோலிவுட்டில் அறிமுகமாகும் இன்ஸ்டா புகழ் பாலமுருகன்!
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK


