நாமக்கல் மாவட்டத்தில் தலைக்கவசம் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகள் மீது 1,242 வழக்குகளும், தலைக்கவசம் அணியாமல் பின்னால் அமர்ந்து பயணித்தவர்கள் மீது 2,604 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு தெரிவித்தது, இருசக்கர வாகன ஓட்டுநர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர் ஆகிய இருவரும் மோட்டார் வாகன சட்டப்படி தலைக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும்.
இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட காவல் துறையின் சார்பில், பொதுமக்களிடையே சாலை விபத்துகளில் தலைக்கவசம் அணியாததால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பதற்காக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்து நடத்தப்பட்டு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் தலைக்கவசம் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகள் மீது 1,242 வழக்குகளும், தலைக்கவசம் அணியாமல் பின்னால் அமர்ந்து பயணித்தவர்கள் மீது 2,604 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 122 நிகழ்ச்சிகளில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டும், அறிவுரைகள் வழங்கியும் மற்றும் ஊர்வலங்கள் நடத்தியும் மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. எனவே, பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தங்கள் குழந்தைகளையும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து சென்று விபத்தின் போது உயிரிழப்பைத் தடுக்க தகுந்த அறிவுரை வழங்கி, ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்றார்.
பரமத்தி வேலூரில்...
பரமத்தி வேலூர் காவல் துறை மற்றும் கந்தசாமி கண்டர் கல்லூரி தேசிய மாணவர் படை சார்பில், தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணி கல்லூரி முன் தொடங்கியது. பேரணியை பரமத்தி வேலூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் (பயிற்சி) சாந்தி கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
பேரணி பரமத்தி வேலூரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் கல்லூரி வளாகத்தை வந்தடைந்தது. இதில் தலைக்கவசம் உயிர் கவசம் என்ற வாசகங்கள் மற்றும் தலைக்கவசத்தின் அவசியம் குறித்த விளம்பரத் தட்டிகளுடன் தேசிய மாணவர்படை மாணவர்கள் மற்றும் பரமத்தி வேலூர் போலீஸார் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்றனர். இதில் 100-க்கும் மேற்பட்ட தேசிய மாணவர் படை, நாட்டுநலப்பணித் திட்ட மாணவர்கள் மற்றும் போலீஸார் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாலியல் குற்றச்சாட்டு! தில்லி கேபிடல்ஸ் வீரர் அபிஷேக் போரல் கைது!

ராம்நாத் கோவிந்தின் சுயசரிதை புத்தகம்: நாளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

சிஎஸ்கே அணிக்கு தலைமைப் பயிற்சியாளராகும் மெக்கல்லம்? சூசகமாக அறிவிப்பு!

சினிமாவில் கிடைக்காத அங்கீகாரம் சின்ன திரையில் கிடைத்தது! சந்தோஷ் பிரதாப் நெகிழ்ச்சி
விடியோக்கள்

உங்களுக்கும் சிபிஐ வழக்கு இருக்கு! Udhayanidhi Vs N Anand! | TN Assembly


