முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்திமக்களவை தலைவரின் தேநீர் விருந்தில் மோடியுடன் கனிமொழி பங்கேற்பு! இந்தியா கூட்டணி புறக்கணிப்பு!கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் வாபஸ்!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு! இரு அவைகளிலும் 11 மசோதாக்கள் நிறைவேற்றம்!
/

கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்: மாற்று ஏற்பாடுகளை செய்யக் கோரிக்கை

கிராம நிர்வாக அலுவலர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில்,

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

கிராம நிர்வாக அலுவலர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், சான்றிதழ்கள் அனைத்தும் தாமதமின்றி கிடைத்திட அரசு மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாய நலச் சங்க மாநிலத் தலைவர் மோகனூர் கே.பாலசுப்பிரமணியன், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்: தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் விவசாயிகள், வங்கிக் கடன் பெறுவதற்கான சான்றிதழ்களை பெறமுடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், வாரிசு, இருப்பிடம், ஜாதி சான்று, திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை பெற வழியின்றி பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, உடனடியாக கிராம நிர்வாக அலுவலர்களை அழைத்துப் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாதபட்சத்தில், தினமும் பணிகள் தாமதமின்றி நடக்கும் வகையில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை தற்காலிமாக பணியமர்த்தி அரசு நலத்திட்ட உதவிகளை தடையின்றி பெற வழிவகை செய்ய வேண்டும்.
கிராம உதவியாளர்களுக்கு பொறுப்பை வழங்கி நேரடியாக வட்டாட்சியர் மூலம் தேவைப்படும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளித்து கிராம நிர்வாக அலுவலகத்தில் தேங்கிக் கிடக்கும் முக்கியச் சான்றுகள் தடையின்றி மக்களுக்கு கிடைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.