சுற்றுச்சூழலைப் பாதுகாக்க சணல், துணிப் பைகளை தயாரிக்க மகளிர் சுய உதவிக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
நாமக்கல் ரத்தின சபாபதி சுற்றுச்சூழல் கிராமிய வளர்ச்சி நிறுவனம் சார்பில், சுற்றுச்சூழல் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் ஐக்கிய நாடுகள் சபை நிகழாண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இலக்காக பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடிப்போம் என்பதை முழக்கமாக வைத்துள்ளது. இதனை செயல்படுத்தும் முதன்மை நாடாக இந்தியாவை உருவாக்குவோம் என பிரதமர் மோடி உறுதியேற்றுள்ளார்.
இதற்கு வலுசேர்க்கும் நோக்கில், அமைப்பைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் குழுவில் தீர்மானம் நிறைவேற்றி, பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க சணல் பைகள் மற்றும் துணிப் பைகளை தயாரித்து குறைந்த விலையில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரித்த சணல் பைகள் மற்றும் துணிப் பைகள் விற்பனையை ரத்தின சபாபதி சுற்றுச்சூழல் அமைப்பின் இயக்குநர் மா.தில்லைசிவக்குமார் தொடக்கி வைத்தார். முதல் விற்பனையை பசுமை மகளிர் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை பெற்றுக்கொண்டார். இவ்விழாவில் சுற்றுச்சூழல் அமைப்பின் பணியாளர்கள் கலையரசி, கார்த்திகாதேவி மற்றும் பசுமை கூட்டமைப்பின் பெண்கள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








