நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

அகற்றப்பட்ட நிழல்கூடத்தை மீண்டும் அமைத்து தர கோரிக்கை

சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்பட்ட பயணிகள் நிழல்கூடத்தை மீண்டும் அமைத்து தர வேண்டும் என மகளிர் சுய உதவிக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On :30 ஜனவரி 2024, 9:33 pm IST

சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்பட்ட பயணிகள் நிழல்கூடத்தை மீண்டும் அமைத்து தர வேண்டும் என மகளிர் சுய உதவிக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட்டம், கவுண்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுவினர், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மு.ஆசியா மரியத்திடம் திங்கள்கிழமை அளித்த மனு: கவுண்டிபாளையம் கிராமம் பரமத்தி-திருச்செங்கோடு மாநில நெடுஞ்சாலையில் உள்ளது. இந்த சாலை கடந்த ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்டபோது, கவுண்டிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் இருந்த பயணிகள் நிழல்கூடம் அப்புறப்படுத்தப்பட்டது.
 இதன்பின் இங்கு புதிதாக நிழல்கூடம் அமைக்கப்படவில்லை. இந்த நிழல்கூடம் கவுண்டிபாளையம், பெருமாபட்டி, வாணக்காரம்பாளையம், வடிவேலம்பாளையம் கிராம மக்களுக்கு பயன்பட்டு வந்தது.
 இங்கு நிழல்கூடம் இல்லாததால் பயணிகள் வெயிலிலும், மழையிலும் சாலை ஓரத்தில் நிற்க வேண்டியுள்ளது. இதனால், இந்த இடத்தில் அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன. 5 கிராம மக்களுக்கு பயன்பட்டு வந்த பயணிகள் நிழல்கூடத்தை இருக்கை வசதியுடன் மீண்டும் அமைத்துக் கொடுக்க வேண்டும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.