ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!ஜம்மு காஷ்மீரில் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழா..! ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஓமர் அப்துல்லா!ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த சம்பவம்: சிறுவன் சாவு, தாய், மகளுக்கு சிகிச்சை

நாமக்கல்லில் 2 குழந்தைகளுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில், சிறுவன் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார். தாய் மற்றும் மகளுக்கு

Updated On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

நாமக்கல்லில் 2 குழந்தைகளுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில், சிறுவன் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார். தாய் மற்றும் மகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 நாமக்கல்-திருச்சி சாலை ஆண்டவர்நகரை சேர்ந்தவர் சரவணன். ரிக்வண்டி தொழிலாளி. இவரது மனைவி சசிகலா(29). காதல் திருமணம் செய்த இவர்களுக்கு அனிஷா(8) என்ற மகளும், தனிஷ்(7) என்ற மகனும் இருந்தனர். தனிஷ் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1ஆம் வகுப்பு படித்து வந்தார்.
 இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக மனம் உடைந்த சசிகலா உணவில் விஷம் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு, தானும் சாப்பிட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.
 உயிருக்குப் போராடிய 3 பேரும் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் தனிஷ் புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.
 சசிகலா, அவரது மகள் அனிஷா ஆகியோருக்கு தொடர்ந்து அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக நாமக்கல் போலீஸார் சசிகலா மீது கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.