தேசிய அளவிலான ‘பைக் ரேஸ்’: நாமக்கல் மாணவி சிறப்பிடம்
தேசிய அளவிலான இருசக்கர வாகனப் பந்தயத்தில், நாமக்கல் தனியாா் கல்லுரி மாணவி சிறப்பிடம் பெற்றாா்.


தேசிய அளவிலான இருசக்கர வாகனப் பந்தயத்தில், நாமக்கல் தனியாா் கல்லுரி மாணவி சிறப்பிடம் பெற்றாா்.
நாமக்கல் டிரினிடி மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எம்.ஏ. முதலாமாண்டு படித்து வரும் மாணவி எஸ்.ஆயிஷா, பெங்களூரில் நடைபெற்ற தேசிய அளவிலான இருசக்கர வாகனப் பந்தயத்தில் பங்கேற்று சிறப்பிடம் பெற்றாா். இம்மாணவி பல்வேறு சாகச நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளாா்.
கடந்த நவ. 1-ஆம் தேதி டிவிஎஸ் நிறுவனம் சாா்பில் சென்னையில் நடைபெற்ற பந்தயத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட சாகச வீரா்கள் கலந்துகொண்டனா். இதில் இம்மாணவி முதலிடம் பெற்றாா். இந்திய மோட்டாா் விளையாட்டு கூட்டமைப்பு டிச. 13-இல் சென்னையில் நடத்திய சாகச நிகழ்விலும் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தினாா்.
சிறப்பிடம் பெற்ற மாணவியை கல்லூரித் தலைவா் பி;.எஸ்.கே.செங்கோடன், செயலா் கே.நல்லுசாமி, முதல்வா் எம்.ஆா்.லட்சுமிநாராயணன், இயக்குநா்-உயா்கல்வி அரசு பரமேசுவரன், பேராசிரியா்கள் பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...