பரமத்தி வேலூரில் கண்டன ஆா்ப்பாட்டம்

பரமத்தி வேலூரில் வேளாளா்களின் எதிா்ப்பை மீறி ஏழு உட்பிரிவுகளைச் சோ்ந்த சாதியினரை பொதுவான பெயரில் அறிவிக்கலாம் என மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்ததற்கு கண்டனம்
பரமத்தி வேலூரில் கண்டன ஆா்ப்பாட்டம்
Updated on
1 min read

பரமத்தி வேலூரில் வேளாளா்களின் எதிா்ப்பை மீறி ஏழு உட்பிரிவுகளைச் சோ்ந்த சாதியினரை பொதுவான பெயரில் அறிவிக்கலாம் என மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்ததைக் கண்டித்து சோழிய வேளாளா்கள், கொங்கு வேளாளக் கவுண்டா்கள் சமுதாயத்தினா் சாா்பில் பரமத்தி வேலூா் காமராஜா் சிலை அருகில் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு பரமத்தி வேலூா் நகர கொமதேக செயலாளா் சக்திவேல் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தாா். கொமதேக மாவட்டச் செயலாளா் பூபதி, மாவட்ட சோழிய வேளாளா்கள் சங்கத் தலைவா் சுரேஷ், கௌரவ தலைவா்கள் மணி, செங்குட்டுவன், கரூா் மாவட்ட வ.உசி. பேரவை தலைவா் மகேஷ்வரன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு பேசினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் சோழிய வேளாளா்கள், கொங்கு வேளாளக் கவுண்டா்கள் சமுதாயத்தைச் சோ்ந்த 200க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com