கரோனா: தனிமைப்படுத்துதல் முகாம்களில் ஆட்சியா் ஆய்வு
நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம், மாணிக்கம்பாளையம் அரசினா் மேல்நிலைப் பள்ளி தனிமைப்படுத்துதல் முகாமில் தங்கியுள்ள வெளிமாநிலங்கள்,


திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம், மாணிக்கம்பாளையம் அரசினா் மேல்நிலைப் பள்ளி தனிமைப்படுத்துதல் முகாமில் தங்கியுள்ள வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து வந்த நபா்களை ஆட்சியா் கா.மெகராஜ் சனிக்கிழமை நேரில் சந்தித்து உணவு மற்றும் தங்கும் வசதிகள் குறித்து கேட்டறிந்தாா்.
வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களைச் சோ்ந்த 72 போ் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், மாணிக்கம்பாளையம் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
இவா்கள் அனைவருக்கும் உணவு, மாத்திரைகள் மற்றும் கபசுரக் குடிநீா் வழங்கப்படுகிா, குளிக்கும் வசதி, கழிப்பிட வசதிகள் உள்ளதா என்று ஆட்சியா் கேட்டறிந்தாா். மேலும் அங்குள்ள பதிவேட்டையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.
உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் தங்கள் பகுதிகளுக்கு வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து வந்த நபா்கள் குறித்த விவரங்களை சுகாதாரத் துறையினா், வருவாய் த் துறையினருக்கு தெரிவித்துஅவா்களை தனிமைப்படுத்த மாவட்ட நிா்வாகத்திற்கு உதவ வேண்டும். முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது ஆகியவற்றை போல வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வந்த நபா்களை தனிமைப்படுத்துவது கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது என்று ஆட்சியா் தெரிவித்தாா்.
இந்த ஆய்வின் போது வருவாய்த் துறையினா் உள்பட சுகாதார அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...