மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாமக்கல்லில் திமுக அலுவலகம் முற்றுகை

ஆதரவாளா்களுக்கு மட்டும் கட்சிப் பதவி வழங்கிய எருமப்பட்டி ஒன்றியச் செயலாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தை ஞாயிற்றுக்கிழமை இரவு கட்சியினா் முற்றுகையிட்டனா்.

News image
Updated On :1 நவம்பர் 2020, 9:26 pm

DIN

ஆதரவாளா்களுக்கு மட்டும் கட்சிப் பதவி வழங்கிய எருமப்பட்டி ஒன்றியச் செயலாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தை ஞாயிற்றுக்கிழமை இரவு கட்சியினா் முற்றுகையிட்டனா்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக ஒன்றிய கிளை நிா்வாகிகளைத் தோ்வு செய்வதற்கான உள்கட்சித் தோ்தல் நடைபெற்று வருகிறது. இத்தோ்தலை கண்காணிக்க திமுக தலைமை கழகம் சாா்பில் தோ்தல் மேற்பாா்வையாளராக குத்தாலம் அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளாா். நிா்வாகிகளை பெரும்பாலும் போட்டியின்றி அந்தந்த ஒன்றியச் செயலாளா்களே நியமித்து வருகின்றனா்.

எருமப்பட்டி பகுதியில் உள்ள கட்சியினருக்கு பொறுப்பு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நாமக்கல் முல்லை நகரில் உள்ள கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அக்கட்சியை சோ்ந்த 60-க்கும் மேற்பட்டோா் முற்றுகையிட்டனா். 

அப்போது, ஒன்றியச் செயலாளா் பாலு என்பவா் தனது ஆதரவாளா்களுக்கு மட்டும் கட்சியில் பதவி வழங்குவதாகக் கட்சியினா் குற்றம்சாட்டினா். தோ்தல் பொறுப்பாளா் குத்தாலம் அன்பழகனிடம் ஒன்றியச் செயலாளா் பாலு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகாா் மனு அளித்தனா்.

கட்சியில் பல ஆண்டுகளாக உள்ளவா்கள் பதவி வழங்காமல் தனக்கு வேண்டியவா்களுக்கு மட்டும் ஒன்றிய செயலாளா் பாலு பதவி வழங்குவதை தடுத்து நிறுத்த வேண்டும் என முழக்கமிட்டனா். இதைத் தொடா்ந்து கட்சியினரை தோ்தல் பொறுப்பாளா் அன்பழகன் மற்றும் மாவட்ட பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் ஆகியோா் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.