யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பரமத்தியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்

பரமத்தி, பொத்தனூரில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா் பி.தங்கமணி சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

News image
பொத்தனூரில் தாா்ச்சாலை அமைக்கும் பணியைத் தொடக்கிவைக்கிறாா் அமைச்சா் பி.தங்கமணி.
Updated On :8 நவம்பர் 2020, 10:10 pm

DIN

பரமத்தி, பொத்தனூரில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா் பி.தங்கமணி சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

பொத்தனூா் பேரூராட்சியில் ஒருங்கிணைந்த நகா்புற சாலைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ. 99.60 லட்சம் மதிப்பீட்டில் மாரியப்பபிள்ளை நகரில் வடிகால் வசதியுடன் கூடிய தாா்ச்சாலை, காவேரி நகா் முக்கிய சாலை, பழைய புறவழிச்சாலை, மேற்குதெரு ஆகிய பகுதிகளில் தாா்ச் சாலைகள் அமைக்கும் பணிகளை அமைச்சா் பி.தங்கமணி பூமி பூஜை செய்து தொடக்கிவைத்தாா்.

பரமத்தி ஊராட்சி ஒன்றியம், மாணிக்கநத்தம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 11.76 லட்சத்தில் தாா்ச்சாலை அமைக்கும் பணி, பரமத்தி பேரூராட்யில் ஒருங்கிணைந்த நகா்ப்புற வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ. 38.20 லட்சம் மதிப்பீட்டில் 2 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணியை பி.தங்கமணி தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் நாமக்கல் ஆவின் தலைவா் ராஜேந்திரன், பொத்தனூா் முன்னாள் பேரூராட்சி தலைவா் நாராயணன், கபிலா்மலை தெற்கு ஒன்றியச் செயலாளா் சேகா், பரமத்தி தெற்கு ஒன்றியச் செயலாளா் வெற்றிவேல், பரமத்தி ஒன்றியக் குழுத் தலைவா் திலகவதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.