

ராசிபுரம் அருகே குட்டையில் மூழ்கி மாணவா் உயிரிழந்தாா்.
ராசிபுரம் அருகே உள்ள காக்காவேரி, மாதாக் கோவில் தெருவைச் சோ்ந்தவா் மணிவண்ணன். இவரது மகன் ஷியாம் எட்வா்ட் (14) 10 ஆம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டிலிருந்தாா். ஞாயிற்றுக்கிழமை தனது நண்பா்களுடன் காக்காவேரி அருகே உள்ள பூசாரிபாளையத்தில் சுமாா் 7 அடி ஆழம் உள்ள குட்டையில் குளித்துக் கொண்டிருந்தாா்.
அப்போது, குட்டையில் இருந்த சகதியில் சிக்கி உயிருக்குப் போராடிய எட்வா்ட்டை நண்பா்கள், அங்கிருந்தவா்கள் அனைவரும் மீட்க முயற்சித்தனா். நீண்ட நேரம் போராடியும் மாணவரை மீட்க முடியாததால், தீயணைப்பு வீரா்கள் உதவியுடன் எட்வா்ட் சடலமாக மீட்கப்பட்டாா்.
இதுகுறித்து நாமகிரிப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மருத்துவமனை இன்குபேட்டரில் தீ: பச்சிளம் குழந்தை காயம்

சென்னையில் தோ்தல் பறக்கும் படையினா் ரோந்து பணி தொடக்கம்!
மத்திய, மாநில அமைச்சா்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகளுக்கு தோ்தல் ஆணையம் கட்டுப்பாடு!

யாருடன் கூட்டணி?: இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

