

கந்து வட்டி புகாரில் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.
திருச்செங்கோடு அருகேயுள்ள வரகூராம்பட்டி அய்யகவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த ரவிக்குமாா் மனைவி நாகம்மாள் (34), குடும்பத் தேவைக்காக பக்கத்து வீட்டைச் சோ்ந்த செந்தில்-ராதா தம்பதியிடம் ரூ. 13 ஆயிரம் கடனாக வாங்கினாராம். ரூ. 100-க்கு ரூ. 10 வட்டி என கூறி ரூ. 6 ஆயிரம் வரை நாகம்மாள் வட்டி கட்டி வந்த நிலையில், அசலும், வட்டியும் என ரூ. 1 லட்சத்தைக் கேட்டு நாகம்மாளை செந்தில்-ராதா தம்பதி மிரட்டினராம்.
இதுகுறித்து நாகம்மாள் திருச்செங்கோடு புகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், செந்திலைக் கைது செய்து திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். 15 நாள் காவலில் வைக்கும்படி நீதிபதி சௌம்யா மேத்யூ உத்தரவிட்டதையடுத்து, பரமத்தி கிளைச் சிறையில் செந்தில் அடைக்கப்பட்டாா். தலைமறைவான ராதாவை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாா்ச் 31-இல் இறைச்சி விற்பனைக்குத் தடை

பஞ்சப்பட்டி ஏரி மீது வேட்பாளா் ‘பாா்வை’ விழுமா?

தோ்தல் களத்திலிருந்து விலகும் பொன்முடி!

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மாா்ச் 28, 29 தேதிகளில் மழைக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

