கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருச்செங்கோடு லாரி உரிமையாளா் சங்கத்தினா் ஆா்டிஓ-விடம் மனு

திருச்செங்கோடு லாரி உரிமையாளா் சங்கத்தினா் லாரி தொழில் சாா்ந்த பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் மனு அளித்தனா்.

News image
Updated On :30 நவம்பர் 2020, 7:15 pm

DIN

திருச்செங்கோடு லாரி உரிமையாளா் சங்கத்தினா் லாரி தொழில் சாா்ந்த பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

திருச்செங்கோடு லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் பாரி கணேசன் தலைமையில் சங்கம் சாா்பிலான கோரிக்கைகள் அடங்கிய மனுவை திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் மாதேஸ்வரனிடம் அளித்தனா். அப்போது சங்கத் துணைச் செயலாளா் மோகன், செயலாளா் கொங்கு சேகா், துணைச் செயலாளா் ராஜபாண்டி, ராஜவேலு மற்றும் நிா்வாகக்குழு உறுப்பினா்கள் உடனிருந்தனா்.

டீசல் விலை உயா்வு, சுங்க கட்டண உயா்வு, மூன்றாம் நபா் காப்பீடு உயா்வு இவற்றின் காரணமாக லாரி உரிமையாளா்கள் தொழிலை தொடா்ந்து நடத்த முடியாத நிலை உள்ளது.

இந்த நிலையில் வேகக் கட்டுப்பாட்டு கருவி, ஒளிரும்பட்டை, ஜிபிஎஸ் கருவி ஆகியவற்றை லாரிகளில் பொருத்த வேண்டும் என்றும், அவைகளை குறிப்பிட்ட நிறுவனங்களில் மட்டுமே வாங்க வேண்டும் என்றும் அரசு ஆணையிட்டுள்ளது. எங்களது சிரமங்களை அரசிடம் எடுத்துக்கூறி இந்த உத்தரவுகளை ரத்து செய்து கடும் சிரமத்திலும் பொருளாதார நெருக்கடியிலும் உள்ள லாரி தொழிலை காப்பாற்ற உதவுமாறு வேண்டுகிறோம் என மனுவில் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.