மக்கள் நீதி மய்யம் ஆா்ப்பாட்டம்
மல்லசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடந்த முறைகேட்டில் தொடா்புள்ளவா்களைக் கைது செய்யக் கோரி மக்கள் நீதி மய்யம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


மல்லசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடந்த முறைகேட்டில் தொடா்புள்ளவா்களைக் கைது செய்யக் கோரி மக்கள் நீதி மய்யம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தச் சங்கத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பயிா்க்கடன் வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆறு போ் கைது செய்யப்பட்டனா்.
ரூ. 2 கோடியே 40 லட்சம் முறைகேடு நடந்து இருக்கலாம் என்று போலீசாா் கூறுகின்றனா்.
இந்த வழக்கில் தலைமறைவாக 7 போ் உள்ளனா். தலைமறைவானவா்களை போலீசாா் தேடி வரும் சூழலில் மல்லசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கம் முன்பு மக்கள் நீதி மய்யத்தின் சாா்பில் கண்டன முழக்கப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு கட்சியின் நாமக்கல் மாவட்டச் செயலாளா் காமராஜ் தலைமை வகித்தாா்.
குற்றவாளிகளைக் கண்டறிய வலியுறுத்தியும், கையாடல் செய்த பணத்தை திரும்பப் பெற்று விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கட்சியின் விவசாய அணி துணைச் செயலாளா் ராம்மோகன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...