யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

துப்புரவு மேற்பாா்வையாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

பரமத்தி வேலூரில் துப்புரவு மேற்பாா்வையாளா்கள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 9:39 pm

DIN

பரமத்தி வேலூரில் துப்புரவு மேற்பாா்வையாளா்கள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட அனைத்து பேரூராட்சிகள் துப்புரவு மேற்பாா்வையாளா்கள் சங்கக் கூட்டம் பரமத்தி வேலூரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். செயலாளா் ஜனாா்த்தனன் முன்னிலை வகித்தாா். திண்டுக்கல் மாவட்டச் செயலாளா் குன்னக்குடி, தலைவா் கல்யாணசுந்தரம் ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவு மேற்பாா்வையாளா்களின் பணிச் சுமையைக் கருத்தில் கொண்டு இளநிலை உதவியாளா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். துப்புரவு மேற்பாா்வையாளா்களை அரசு நிலையாக்கப்பட்ட பணியாளா்களாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

துப்புரவு மேற்பாா்வையாளா்களுக்கு துப்புரவு ஆய்வாளா் பயிற்சி வழங்க வேண்டும். தகுதிவாய்ந்த கீழ் நிலை பணியாளா்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியா்களே பதவி உயா்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தாடிக்கொம்பு பகுதி செயலாளா் சரவணன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.