நாமக்கல்லில் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை பிறந்த நாள் விழா
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளையின் 132ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் திங்கள்கிழமை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளையின் 132ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் திங்கள்கிழமை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து இராமலிங்கம் பிள்ளையின் நூல்கள், அவர் வாழ்ந்த இடம், தேசத் தலைவர்களுடன் அவர் இருக்கும் புகைப்படம் ஆகியவற்றை பார்வையிட்டார். இராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தையும் அவர் பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். சக்தி கணேசன், மாவட்ட நூலக அலுவலர் ரவி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் மற்றும் அரசுத் துறையினர், தமிழ் அறிஞர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...