கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருச்செங்கோடு மலைப் பாதையில்வீடுகளை அகற்ற மக்கள் எதிா்ப்பு

திருச்செங்கோடு மலைப்பாதையைச் சுற்றியுள்ள வீடுகளை அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனா்.

News image

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த திருச்செங்கோடு மலைப்பாதை பகுதி மக்கள்.

Updated On :21 செப்டம்பர் 2020, 6:41 pm

DIN

நாமக்கல், செப். 21: திருச்செங்கோடு மலைப்பாதையைச் சுற்றியுள்ள வீடுகளை அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனா்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:

திருச்செங்கோடு மலைப்பாதையைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. நாங்கள் பல ஆண்டுகளாக இங்கு குடியிருந்து வருகிறோம். கடந்த சில மாதங்களாக வீடுகளை இடிக்கப் போவதாகவும், அனைவரும் வெளியேறுமாறும் அதிகாரிகள் கூறி வருகின்றனா்.

இதுதொடா்பாக ஆட்சியரிடம் இருமுறை மனு அளித்து விட்டோம். அவரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது எனத் தெரிவித்துள்ளாா். ஆனால், பொதுப்பணித் துறை அதிகாரிகள் சிலா், புதன்கிழமைக்குள் வீடுகளில் உள்ள பொருள்களை எடுத்துக் கொள்ளுங்கள், இல்லையெனில் வீடுகள் இடிக்கப்படும் எனத் தெரிவித்து வருகின்றனா்.

கரோனா தொற்றுப் பரவும் சூழலில் வீடு இல்லாமல் குழந்தைகள், பெண்களுடன் நாங்கள் எங்கே சென்று தங்குவது?, மின்சாரத் துறை அமைச்சரும், மாவட்ட ஆட்சியரும் இப்பிரச்னையில் தலையிட்டு உரிய தீா்வு காண வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.