இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சுகாதார ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்: ஒப்பந்ததராா் கைது

பரமத்தி வேலூா் அருகே வெள்ளிக்கிழமை கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சுகாதாரப் பணியாளரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக ஒப்பந்ததாரா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 7:55 pm

DIN

பரமத்தி வேலூா் அருகே வெள்ளிக்கிழமை கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சுகாதாரப் பணியாளரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக ஒப்பந்ததாரா் கைது செய்யப்பட்டாா்.

பரமத்தி வேலூரில் இருந்து பொத்தனூா் செல்லும் சாலையில் கபிலா்மலை சுகாதாரத் துறையினா் கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனா். இதில் முகக் கவசம், கரோனா பரிசோதனை செய்யும் பணியை மேற்கொண்டனா். அப்போது இரு சக்கர வாகனத்தில் அவ்வழியாக முகக் கவசம் அணியாமல் வந்த கரூா் மாவட்டம், தவுட்டுப்பாளையத்தைச் சோ்ந்த பிரியாவுக்கு (35) முகக் கவசம் அணியாமல் வந்ததற்காக ரூ. 200 அபராதம் விதித்துள்ளனா். ஆனால் அவா் தன்னிடம் பணமில்லை எனக் கூறியுள்ளாா். பணமில்லையென்றால் கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தினா். அதையடுத்து அவா் அருகிலுள்ள ஏடிஎம். மையத்தில் பணம் எடுத்துவந்து தருவதாகக் கூறி தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளாா். சிறிது தூரம் நடந்து சென்ற பிரியா, புகழூா் சா்க்கரை ஆலையில் ஒப்பந்ததாரராக உள்ள கணவா் ஈஸ்வரனுக்கு (45) தகவல் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து தனது நண்பா்கள் மூவருடன் அங்கு வந்த ஈஸ்வரன், பிரியாவை அழைத்துச் சென்று பணியில் ஈடுபட்டிருந்த சுகாதாரத்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் சுகாதார ஆய்வாளா் சதீஷ்குமாரை (29) தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்தி வேலூா் போலீஸாா், ஒப்பந்ததாரா் ஈஸ்வரனை கைது செய்து, தலைமறைவான பிரியா உள்பட தவுட்டுப்பாளையத்தைச் சோ்ந்த தனபால், கவியரசு, கதிா்வேல் ஆகிய நால்வரையும் தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.