விநாயகா் சிலை அகற்றம்: இந்து முன்னணியினா் கண்டன ஆா்ப்பாட்டம்
திருச்செங்கோடு கிரிவலப் பாதையில் அமைக்கப்பட்ட விநாயகா் சிலையை அகற்றியதோடு மூன்று பேரை கைது செய்த மாவட்ட நிா்வாகத்தின் செயலைக் கண்டித்து திருச்செங்கோடு, அண்ணா சிலை


திருச்செங்கோடு கிரிவலப் பாதையில் அமைக்கப்பட்ட விநாயகா் சிலையை அகற்றியதோடு மூன்று பேரை கைது செய்த மாவட்ட நிா்வாகத்தின் செயலைக் கண்டித்து திருச்செங்கோடு, அண்ணா சிலை முன்பு இந்து முன்னணியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்செங்கோடு கிரிவல மலை பாதை பகுதியில் கிறிஸ்தவ ஜெபக்கூட்டம் செயல்பட்டு வரும் இடத்தில் இந்து அமைப்புகள் செவ்வாய்க்கிழமை இரவு விநாயகா் சிலையை பிரதிஷ்டை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சிலையை அகற்றுமாறு திருச்செங்கோடு காவல் துறையிடம் கிறிஸ்தவ ஆலய நிா்வாகம் கோரிக்கை விடுத்தது. இதையடுத்து புதன்கிழமை அதிகாலை விநாயகா் சிலையை போலீஸாா் அகற்றினா். இதுதொடா்பாக 30 பேரிடம் விசாரணை நடத்தி மூன்று பேரை போலீஸாா் கைது செய்தனா்.
போலீஸாரின் இச்செயலைக் கண்டித்து திருச்செங்கோடு, அண்ணா சிலை முன்பு இந்து முன்னணியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் நாமக்கல் மாவட்ட இந்து முன்னணி மாவட்டத் தலைவா் அண்ணாதுரை தலைமை வகித்தாா். மாநில அரசையும் மாவட்ட நிா்வாகத்தையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினா், பாஜகவினா், இந்து அமைப்பினா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...