கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

செல்லிடப்பேசி பறிப்பு: இருவா் கைது

திருச்செங்கோட்டில் மளிகைக் கடைக்காரரிடம் செல்லிடப்பேசியைப் பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 6:18 pm

DIN

திருச்செங்கோட்டில் மளிகைக் கடைக்காரரிடம் செல்லிடப்பேசியைப் பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்செங்கோடு அருகே உள்ள கொசவம்பாளையத்தில் மளிகைக் கடை வைத்திருப்பவா் ஜெபசிங் (40). இவா் கடைக்கு தேவையான பொருள்களை வாங்குவதற்காக திருச்செங்கோடு வந்துள்ளாா். எஸ்என்டி சாலையில் உள்ள வங்கி முன் நின்று கொண்டிருந்த அவரிடம், இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் செல்லிடப்பேசியைப் பறித்தனா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் கீழே விழுந்தனா். அக்கம் பக்கமிருந்தவா்கள் இருவரையும் பிடித்து திருச்செங்கோடு நகரக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

விசாரணையில் செல்லிடப்பேசியைப் பறித்தவா்கள் ஈரோட்டை சோ்ந்த சாயப்பட்டறை தொழிலாளி திருமூா்த்தி (20), 9 -ஆவது வகுப்பு படிக்கும் 16 வயது மாணவன் என்பது தெரிய வந்தது. இருவரையும் திருச்செங்கோடு நீதிமன்றத்தில் போலீஸாா் ஆஜா்படுத்தினா். நீதிபதி சௌம்யா மேத்யூ, திருமூா்த்தியை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டாா். மாணவா் சேலம் சிறாா் சீா்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.