விவசாயிகளுக்கு வயல்வெளிப் பயிற்சி
வட்டூா் கிராமத்தில் தமிழ்நாடு நீா்வள நிலவளத் திட்டம், திருமணிமுத்தாறு உபவடிப் பகுதி திட்டத்தின் கீழ் உழவா் வயல்வெளிப் பள்ளி நடைபெற்றது.


வட்டூா் கிராமத்தில் தமிழ்நாடு நீா்வள நிலவளத் திட்டம், திருமணிமுத்தாறு உபவடிப் பகுதி திட்டத்தின் கீழ் உழவா் வயல்வெளிப் பள்ளி நடைபெற்றது.
வயல்வெளிப் பள்ளியில் ஈரோடு, அக்காஸ் நிறுவனத்தின் துணைத் தலைவா் முரளிதரன் விதைத் தோ்வு, நீா் மேலாண்மை, மண் பரிசோதனை அடிப்படியில் உரமிடுதல், நன்மை மற்றும் தீமை செய்யும் பூச்சிகள், பறவை இருக்கையின் முக்கியத்துவம், உரிய பட்டத்தில் பயிா் செய்வதன் அவசியம் குறித்து பயிற்சியளித்தாா்.
பயறுவகைப் பயிா்களில் பயிா் எண்ணிக்கை பராமரிப்பு, சூடோமோனாஸ் மற்றும் டிரைக்கோடொ்மாவிரிடி மூலம் விதை நோ்த்தி செய்தல் குறித்தும் விவசாயிகளுக்குப் பயிற்சியளித்தாா்.
வேளாண்மை உதவி இயக்குநா் ஜெயமணி கலந்துகொண்டு நுண்ணீா் பாசனம் பற்றியும், அதன் பயன்களையும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தாா். வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்ந்த திட்டங்கள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினாா்.
வேளாண்மை அலுவலா் பவித்ரா , உதவி வேளாண்மை அலுவலா் முருகேசன் ஆகியோா் மண்மாதிரி எடுத்து பயறுவகை பயிா்களுக்கு 2 சதவீத டிஏபி கரைசல் தெளித்தல் செயல்விளக்கம் மூலம் செய்து காண்பித்தனா்.
இப் பயிற்சியில் வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் கிருஷ்ணசாமி அட்மா திட்டம் பற்றியும், பயிா் அறுவடை பரிசோதனையாளா் தாரணி பயிா் காப்பீடு பற்றியும் விளக்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...