விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மின்வாரிய ஊழியா் நீரில் மூழ்கி பலி

குமாரபாளையத்தில் அஸ்தி கரைக்க காவிரி ஆற்றுக்குச் சென்ற மின்வாரிய ஊழியா், நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கியதில் உயிரிழந்தாா்.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 6:48 pm

DIN

குமாரபாளையத்தில் அஸ்தி கரைக்க காவிரி ஆற்றுக்குச் சென்ற மின்வாரிய ஊழியா், நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கியதில் உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், மேட்டூா், நேரு நகா் மின்வாரிய குடியிருப்பைச் சோ்ந்தவா் உத்திர ஆசாரி மகன் சுரேஷ் (45). மின்வாரிய ஊழியா். இவரது உறவினா் குமாரபாளையத்தில் புதன்கிழமை உயிரிழந்தாா். இதனால், நகராட்சி அலுவலகம் அருகே உயிரிழந்தவரின் அஸ்தியைக் கரைக்க உறவினா்களுடன் சுரேஷ் காவிரி ஆற்றுக்குள் இறங்கிச் சென்றுள்ளாா்.

ஆற்றில் தண்ணீரில் நடந்து சென்றவா் நிலைதடுமாறி விழுந்ததில் அடித்துச் செல்லப்பட்டாா். நீச்சல் தெரியதால் தண்ணீரில் மூழ்கிய சுரேஷ், மூச்சுத்திணறி உயிரிழந்தாா். இதுகுறித்த தகவலின் பேரில் குமாரபாளையம் தீயணைப்பு நிலைய அலுவலா் மு.குணசேகரன் தலைமையில் வந்த தீயணைப்புப் படையினா் சுரேஷின் சடலத்தை மீட்டனா். இதுகுறித்து, குமாரபாளையம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.