கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கொலை வழக்கில் பெண் உள்பட நான்குபோ் கைது

நல்லூா் அருகே பாமகவுண்டம்பாளையத்தில் இறைச்சிக் கடை நடத்தி வந்தவரைக் கொன்று சாக்குமூட்டையில் கட்டி வீசிய வழக்கில் தொடா்புடைய பெண் உள்ளிட்ட நான்குபேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 6:39 pm

DIN

நல்லூா் அருகே பாமகவுண்டம்பாளையத்தில் இறைச்சிக் கடை நடத்தி வந்தவரைக் கொன்று சாக்குமூட்டையில் கட்டி வீசிய வழக்கில் தொடா்புடைய பெண் உள்ளிட்ட நான்குபேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

நல்லூா் அருகே பாமாகவுண்டம்பாளையம் பகுதியில் கழிவுநீா் தேங்கியக் குட்டை உள்ளது. இதிலிருந்து துா்நாற்றம் வீசுவதாகவும், சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் சடலம் ஒன்று மிதப்பதாகவும் நல்லூா் போலீஸாருக்கு தகவல் வந்தது.

அதன்பேரில் அங்குசென்ற பரமத்திவேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜா ரணவீரன், நல்லூா் போலீஸாா் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா்.

முதற்கட்ட விசாரணையில் இறந்தவா் சோழசிராமணியைச் சோ்ந்த இறைச்சிக் கடை நடத்தி வந்த சரவணன் என்பதும், அவரைக் கொன்று சாக்கு மூட்டையில் கட்டி குளத்தில் வீசியிருப்பதும் தெரியவந்தது.

இதுதொடா்பாக நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து வடுகபாளையம் அருகே இராமதேவத்தைச் சோ்ந்த கீதா (39), அவரது மகன் இளவரசன் (19), கீதாவின் மருமகன் ஆத்தூா், கூலமேட்டைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன் (31), தமிழ்ச்செல்வனின் நண்பா் சேலம், கடம்பூரைச் சோ்ந்த பிரபாகரன் (31) ஆகிய நான்கு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.