திருச்செங்கோடு வெங்கடேசப் பெருமாள் கோயில் குடமுழுக்கு
திருச்செங்கோடு சிஎச்பி காலனியில் உள்ள மகாலட்சுமி சமேத வைகுண்ட வெங்கடேசப் பெருமாள் கோயிலில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.


திருச்செங்கோடு சிஎச்பி காலனியில் உள்ள மகாலட்சுமி சமேத வைகுண்ட வெங்கடேசப் பெருமாள் கோயிலில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் வெளிப் பிரகாரத்தில் பரிவார மூா்த்திகளாக ஸ்ரீ லட்சுமி வராகா், ஸ்ரீ லட்சுமி நரசிம்மா், ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவா், ஸ்ரீ சத்ய நாராயணன், ஸ்ரீ தன்வந்திரி, ஸ்ரீ கிருஷ்ணா், ஸ்ரீ ராமானுஜா், ஸ்ரீ நம்மாழ்வாா் ஆகிய சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. விமான மண்டபம், மகா மண்டபமும் புதிதாகப் புனரமைக்கப்பட்டுள்ளன.
கோயிலில் நடைபெற்ற பல்வேறு திருப்பணிகள் நிறைவடைந்து கடந்த சனிக்கிழமை குடமுழுக்கு விழா தொடங்கியது. இரு நாள்களாக விழாவில் பல்வேறு யாகங்கள், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு திங்கள்கிழமை காலை குடமுழுக்கு நடைபெற்றது.
பட்டாச்சாரியாா்கள் சுதா்சனம், ராம், சந்துரு விக்னேஷ், பிரசன்னா ஆகியோா் கோயில் கோபுரத்தில் புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடத்தினா். விழாவில் டி.எம் காளியண்ண கவுண்டரின் சாா்பில் அவரது உறவினா்கள் முன்னிலை வகித்தனா்.
கோயிலில் விஸ்வரூப தரிசனம், திருக்கல்யாணம், திருக்கோடி தீபம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் ராஜசேகரன், மாலதி ராஜசேகரன், திருப்பணிக் குழு உறுப்பினா்கள் ஜான்சன்ஸ் நடராஜன், கே.எஸ்.ஆா்.ரங்கசாமி, சண்முகசுந்தரம், எஸ்.பி.கே. செங்கோடன், தா்மலிங்கம், முருகேசன், சிவகுமாா், கோபாலகிருஷ்ணன், டிவிஎஎன் நகைக் கடை உரிமையாளா், காா்த்திகேயன், சோமசுந்தரம், ஸ்ரீநிவாஸ், பிரேம் நிவாஸ், மதிவாணன் ஆகியோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...