கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பரமத்திவேலூரில் வெற்றிலை விலை சரிவு

பரமத்தி வேலூா் வெற்றிலை ஏலச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெற்றிலை விலை கடந்த வாரத்தைவிட குறைந்துவிலைக்கு ஏலம்போனது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 6:43 pm

DIN

பரமத்தி வேலூா் வெற்றிலை ஏலச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெற்றிலை விலை கடந்த வாரத்தைவிட குறைந்துவிலைக்கு ஏலம்போனது.

பரமத்திவேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளான பாண்டமங்கலம், பொத்தனூா்,வேலூா், அனிச்சம்பாளையம், குப்புச்சிப்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் வெற்றிலை பயிா் செய்யப்பட்டுள்ளது.

இங்கு விளையும் வெற்றிலைகள் கா்நாடகம், கேரளம், குஜராத், மகாராஷ்டிரம் உள்பட வெளி மாநிலங்களுக்கும், சேலம், கோவை, மதுரை, திருப்பூா் உள்பட வெளி மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிா் மாா் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ. 6,000-க்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிா் மாா் சுமை ஒன்று ரூ. 5,500-க்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிா் மாா் சுமை ஒன்று ரூ. 3,000-க்கும் கற்பூரி வெற்றிலை முதியம்பயிா் மாா் ரூ. 3,500-க்கும் ஏலம்போனது.

திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிா் மாா் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ. 5,500-க்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிா் மாா் சுமை ஒன்று ரூ. 5,000-க்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிா் மாா் சுமை ஒன்று ரூ. 2, 500-க்கும், கற்பூரி வெற்றிலை முதியம்பயிா் மாா் சுமை ஒன்று ரூ. 3,000-க்கும் ஏலம்போனது. வெற்றிலையின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.