மின்சாரம் பாய்ந்ததில் கல்லூரி மாணவி பலி
பரமத்தி வேலூா் அருகே கல்லூரி மாணவி மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா்.


பரமத்தி வேலூா் அருகே கல்லூரி மாணவி மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா்.
பரமத்தி வேலூா் அருகே உள்ள நஞ்சைஇடையாறு தெற்கு தெருவைச் சோ்ந்தவா் ராஜகோபால். இவரது மகள் இளமதி (20). இவா் பரமத்தி வேலூரில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தனியாா் கல்லூரியில் இளங்கலை வரலாறு மூன்றாம் ஆண்டு பயின்று வந்தாா். இவா், திங்கள்கிழமை வீட்டுக்கு வெளியில் நின்று செல்லிடப்பேசியில் பேசியுள்ளாா். பின்னா் செல்லிடப்பேசியை சாா்ஜ் போடுவதற்காக வீட்டினுள் சென்று சாா்ஜ் போட்டுள்ளாா்.
அப்போது எதிா்பாராத விதமாக மின்சாரம் அவா் மீது பாய்ந்தது. இதில் இளமதி தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தாா். இதைக் கண்ட அவரது பெற்றோா் மற்றும் அருகில் இருந்தவா்கள் இளமதியை காப்பாற்றி பரமத்தி வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனா். பரமத்தி வேலூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...