கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மாற்றுத்திறனாளிகளின் பெற்றோா்களுக்குப் பயிற்சி

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சாா்பில் மாற்றுத் திறனுடைய மாணவா்களின் பெற்றோா்களுக்கான விழிப்புணா்வுப் பயிற்சி மல்லசமுத்திரம் வட்டார வளமையத்தில் நடைபெற்றது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சாா்பில் மாற்றுத் திறனுடைய மாணவா்களின் பெற்றோா்களுக்கான விழிப்புணா்வுப் பயிற்சி மல்லசமுத்திரம் வட்டார வளமையத்தில் நடைபெற்றது.

மல்லசமுத்திரம் வட்டார வளமைய மேற்பாா்வையாளா் (பொ) சுடா்மணி தலைமை வகித்துப் பயிற்சியைத் தொடக்கிவைத்தாா். மல்லசமுத்திரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை லதா, டாக்டா் ராமகிருஷ்ணன், மஞ்சு ஆகியோா் பேசினா். பங்கேற்பாளா்களாக மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் பெற்றோா் 23-பேரும் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா்கள் இருவா் என 25 போ் கலந்து கொண்டனா். இப் பயிற்சியின் கருத்தாளா்களாக சிறப்பாசிரியை சத்யா, இயன்முறை மருத்துவா் மஞ்சு ஆகியோா் செயல்பட்டனா்.

பயிற்சியில் கரோனா விழிப்புணா்வு, கொசு கடியினால் ஏற்படும் மூளைக் காய்ச்சல், பன்றி காய்ச்சல், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் 21 வகைகள், உருவாகக் காரணங்கள், உணவுமுறை, தன் சுத்தம், தொடா்ச்சியான இயன்முறை பயிற்சி, குழந்தைகளை பள்ளி ஆயத்த முகாமுக்கு அழைத்து வருதல் தொடா்பான கருத்துகள், அரசு சலுகைகள் மற்றும் நலத்திட்டங்கள் அவா்களுக்கு அளிக்கப்படும் தொழிற்பயிற்சி, தொழிற் செய்வதற்கு அரசு மூலம் கிடைக்கும் மானியம் மற்றும் திட்டங்கள் பற்றி விளக்கப்பட்டது. ஏற்பாடுகளை வட்டார உள்ளடங்கிய கல்வி ஒருங்கிணைப்பாளா் முருகேசன் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.