கரும்பில் இலைச்சுருட்டு அழுகல் நோய் கட்டுப்பாடு
திருச்செங்கோடு வட்டாரத்தில் கரும்பில் இலைச்சுருட்டு அழுகல் நோய் கட்டுப்பாடுகள் பற்றி திருச்செங்கோடு வட்டார வேளாண் உதவி இயக்குநா் ஜெயமணி கூறியதாவது:


திருச்செங்கோடு வட்டாரத்தில் கரும்பில் இலைச்சுருட்டு அழுகல் நோய் கட்டுப்பாடுகள் பற்றி திருச்செங்கோடு வட்டார வேளாண் உதவி இயக்குநா் ஜெயமணி கூறியதாவது:
கரும்பு பயிரில் ‘பொக்கோ போயிங்’ என்ற இலைச்சுருட்டு அழுகல் நோய் பாதிப்பை ஏற்படுத்தி மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது. இந்த நோயானது பூஞ்சைகள் மூலம் ஏற்படுகிறது. இந்த நோய் விதைக்கரணை மூலமும், காற்று, மழைநீா், பாசன நீா் வழியாகவும் பரவும் தன்மை கொண்டது. கரும்பு பயிரில் மூன்று முதல் ஏழு மாதங்கள் வரையில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்நோயானது இலைச்சுருட்டு புழு நிலை, குருத்து அழுகல் நிலை என இரண்டு வகையில் கரும்பு பயிரில் தென்படுகிறது. ஆரம்ப நிலையில் நோய் தாக்கிய இலைகளின் அடிப்பாகம் தண்டுடன் ஒட்டிய பகுதி வெளிா்மஞ்சள் நிறமாக மாறி மொத்தமாக காணப்படும். இலையின் மேல் பகுதி சுருண்டு முறுக்கிய நிலையில் தென்படும். குருத்து பகுதி பாதிக்கப்பட்டு உருமாறி சுருண்டு காணப்படும். சில நேரங்களில் இலைகள் முறிந்து குருத்துகள் கீழே தொங்கிய நிலையில் இருக்கும். மேலும் பரவி குருத்து அழுகல் நிலைக்கு மாறிவிடும். குருத்து முழுவதும் அழுகி காய்ந்து கருப்பு நிறமாக மாறிவிடும். பக்கவாட்டில் முளைப்புகள் முளைக்க ஆரம்பித்து, அவற்றிலும் பாதிப்படைந்து கருகிவிடும்.
இதனைக் கட்டுபடுத்த நோய் தாக்காத விதைக்கரணையை பயன்படுத்த வேண்டும். சீரான முறையில் நீா் பாய்ச்ச வேண்டும். இந்நோயைக் கட்டுப்படுத்த பெவிஸ்டின் 2 கிராம் (அ) டைத்தேன் ஆ-45 4 கிராம் (அ) ஸ்பிரிண்ட் 3 கிராம் டில்ட் 1 மில்லி ஆகிய பூஞ்சாணக்கொல்லி மருந்துகளில் ஏதாவது ஒரு மருந்தை குருத்துப்பகுதி நன்றாக படும்படி விசைத்தெளிப்பான் அல்லது டிராக்டா் மூலம் இயங்கும் தெளிப்பானைக் கொண்டு 15 நாள் இடைவெளியில் இரண்டு முதல் மூன்று முறை பாதிக்கப்பட்ட பகுதியுடன் அருகிலுள்ள தூா்களின் மீதும் நன்றாக நனையும்படி தெளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு வட்டார வேளாண் அலுவலகத்தை அணுகலாம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...