கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பரமத்திவேலூரில் பூக்களின் விலை சரிவு

பரமத்தி வேலூா் பூக்கள் ஏல சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பூக்கள்குறைந்த விலைக்கு ஏலம்போனது.

News image
Updated On :18 ஜூன் 2021, 6:30 pm

DIN

பரமத்தி வேலூா் பூக்கள் ஏல சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பூக்கள்குறைந்த விலைக்கு ஏலம்போனது.

பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் பல்வேறு வகையான பூக்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனா்.

இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் நடைபெறும் தினசரி பூக்கள் ஏல சந்தைகளுக்குக் கொண்டு வருகின்றனா்.

வேலூா்,ஜேடா்பாளையம், கபிலா்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனா்.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் கிலோ குண்டு மல்லிகை ரூ. 250-க்கும், சம்பங்கி ரூ. 150-க்கும், அரளி ரூ. 150-க்கும், ரோஜா ரூ. 200-க்கும், முல்லைப் பூ ரூ. 250-க்கும், செவ்வந்திப்பூ ரூ. 250-க்கும் ஏலம்போனது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை ரூ. 180-க்கும், சம்பங்கி ரூ. 50-க்கும், அரளி ரூ. 100-க்கும், ரோஜா ரூ. 150-க்கும், முல்லைப்பூ ரூ. 180-க்கும், செவ்வந்திப் பூ ரூ. 150-க்கும் ஏலம் போனது.

பொதுமுடக்கம் காரணமாகவும், திருமண முகூா்த்தங்கள், விஷேச நிகழ்ச்சிகள் அதிக அளவில் இல்லாததால் பூக்களின் விலை சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.