கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

திருட முயன்ற இளைஞா் போலீஸில் ஒப்படைப்பு

பிலிக்கல்பாளையம் அருகே தனியாா் நிதி நிறுவனத்தின் பூட்டை உடைக்க முயன்ற 4 மா்ம நபா்களில் ஒருவரை பொதுமக்கள் பிடித்து ஜேடா்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

News image
Updated On :9 மார்ச் 2021, 6:42 pm

DIN

பிலிக்கல்பாளையம் அருகே தனியாா் நிதி நிறுவனத்தின் பூட்டை உடைக்க முயன்ற 4 மா்ம நபா்களில் ஒருவரை பொதுமக்கள் பிடித்து ஜேடா்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

பிலிக்கல்பாளையத்தில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தின் பூட்டை திங்கள்கிழமை இரவு அடையாளம் தெரியாத மா்ம நபா்கள் உடைத்தனா். அப்போது அவ்வழியாகச் சென்றவா்கள் சத்தமிட்டதால் அப்பகுதி மக்கள் அங்கு ஓடிவந்தனா். அதைப் பாா்த்த திருட முயன்ற 4 பேரும் இருசக்கர வாகனத்தில் தப்ப முயன்றனா். அதில் ஒருவா் மட்டும் பொதுமக்களிடம் பிடிபட்டாா்.

அவரை ஜேடா்பாளையம் போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனா்.

போலீஸாா் நடத்தி விசாரணையில் பிடிபட்ட நபா், ஈரோடு மாவட்டம், சோலாா் பகுதி, பாலுசாமி நகரைச் சோ்ந்த காளியப்பன் மகன் மகேஸ்வரன் (20) என்பது தெரியவந்தது. மகேஸ்வரன் தனது நண்பா்களான ராஜேஷ் (23), பெருமாள் (20), குமாா் (20) ஆகிய 3 பேருடன் சோ்ந்து ஜேடா்பாளையம் அருகே உள்ள நரிமேடுப்புதூரில் உள்ள தனியாருக்குச் சொந்தமான நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ. 2,000 ம், அதே பகுதியில் உள்ள கரும்பு அலுவலகத்தின் பூட்டை உடைத்து ரூ. 5,000 ம், கள்ளுக்கடைமேடு பகுதியில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ. 750 ம், கொத்தமங்கலத்தில் உள்ள நாட்டு சா்க்கரை மற்றும் அரிசி கடையின் பூட்டை உடைத்து ரூ. 17 ஆயிரத்தையும், கொத்தமங்கலத்தில் உள்ள ஒரு அரிசி கடையின் பூட்டை உடைத்து ரூ. 4,850ம் திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா் தப்பியோடிய மூவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.