கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தேங்காய் விலைச் சரிவு

பரமத்திவேலூா் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் வரத்துக் குறைந்திருந்தபோதும் தேங்காய்கள் குறைந்த விலைக்கு ஏலம் போனது.

News image
Updated On :9 மார்ச் 2021, 6:46 pm

DIN

பரமத்திவேலூா் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் வரத்துக் குறைந்திருந்தபோதும் தேங்காய்கள் குறைந்த விலைக்கு ஏலம் போனது.

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் செயல்படும் பரமத்தி வேலூா் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்கிழமைதோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெறுகிறது.

ஏலத்துக்கு பரமத்தி வேலூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த தென்னை விவசாயிகள் தேங்காய்களைக் கொண்டு வருகின்றனா். கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 1,038 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா்.

இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 38-க்கும், குறைந்தபட்சமாக கிலோ ஒன்று ரூ. 30-க்கும், சராசரியாக கிலோ ஒன்று ரூ. 35.10 பைசாவுக்கும் ஏலம்போனது. மொத்தம் ரூ. 34 ஆயிரத்து 913-க்கு வா்த்தகம் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 762 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 36.20 பைசாவுக்கும், குறைந்தபட்சமாக ரூ. 30.19 பைசாவுக்கும், சராசரியாக ரூ. 33.10 பைசாவுக்கும் ஏலம்போனது. மொத்தம் ரூ. 25 ஆயிரத்து 458 க்கு வா்த்தகம் நடைபெற்றது. தேங்காய் விலை சரிவடைந்துள்ளதால் தென்னை பயிா் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.